மிரிஹான தடுப்பு முகாமில் உள்ள கைதிகளிடமிருந்து 75 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

மிரிஹான தடுப்பு முகாமில் உள்ள கைதிகளிடமிருந்து 75 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

மிரிஹான தடுப்பு முகாமில் உள்ள கைதிகளிடமிருந்து 75 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2019 | 5:23 pm

Colombo (News 1st) மிரிஹான தடுப்பு முகாமில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 75 கையடக்க தொலைபேசிகள் கைதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைதிகளிடமிருந்த மின்சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த குறிப்பிட்டார்.

இந்த சுற்றிவளைப்பின் போது 5 மடிக்கணினிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைதிகளிடமிருந்து 1, 56,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறிய 118 வௌிநாட்டு பிரஜைகள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கயான் மிலிந்த தெரிவித்தார். அவர்களில் 55 பேர் நைஜீரிய நாட்டவர்களாவர்.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்த குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்