தலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி

தலைவியில் சசிகலாவாக நடிக்கும் பிரியாமணி

by Bella Dalima 05-12-2019 | 4:25 PM
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு 'தலைவி' எனும் பெயரில் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. விப்ரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றமை குறிப்பிடத்தக்கது.