ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 04-12-2019 | 6:59 PM
நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு 106 நாட்களின் பின்னர் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. INX ஊடக முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் பிணை மனுவைக் கடந்த மாதம் 15 ஆம் திகதி நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி சிதம்பரம் தரப்பு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், சிதம்பரத்திற்கு பிணை கிடைத்தமை தொடர்பில் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அவர் 106 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தமை பழிவாங்கும் செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.