லைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்

லைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்

லைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2019 | 8:47 pm

Colombo (News 1st) லைகா மொபைல் மற்றும் லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு மலேஷிய பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கியுள்ளது.

சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கையின் வட, கிழக்கில் மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களையும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார்.

அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி மலேஷிய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கியுள்ளது.

1972 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி பிறந்த சுபாஸ்கரன் அல்லிராஜா, 2006 ஆம் ஆண்டு லைகா மொபைல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு லைகா குழுமம் 23 நாடுகளில் இயங்கி வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்