யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை அவதானிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் சூரிய கிரகணத்தை அவதானிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2019 | 8:23 pm

Colombo (News 1st) வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை 26 டிசம்பர் 2019 அன்று பெறவுள்ளது.

இந்நிலையில், சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் தௌிவூட்டும் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு ​நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்தார்

இதன்போது, மாணவர்களுக்கு வானவியல் தொடர்பான விரிவுரைகளை நடத்தவும் கிரகணத்தின் போது விஞ்ஞான ஆய்விற்குத் தேவையான அளவீடுகளை மேற்கொள்ளவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்