ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு

ஏப்ரலில் பொதுத்தேர்தல் நடத்தப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2019 | 3:29 pm

Colombo (News 1st) மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் ஏப்ரல் 25, 27, மற்றும் 28 ஆகிய திகதிகளில் ஒரு நாளில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியற்கட்சி பிரதிநிதிகளுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, பொதுத்தேர்தல் குறித்து கருத்து வௌியிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்