தடயவியல் கணக்கறிக்கையை இரகசியமாக வைக்க தீர்மானம்

முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை இரகசியமாக வைக்க கோப் குழு தீர்மானம்

by Staff Writer 03-12-2019 | 5:25 PM
Colombo (News 1st) புதிய கோப் குழு நியமிக்கப்படும் வரை முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை இரகசியமாக வைக்க கோப் குழுவின் முன்னாள் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தீர்மானித்துள்ளார். தடயவியல் கணக்கறிக்கை தொடர்பிலான 5 அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளதாக வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த கணக்கறிக்கைகளை கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே கையாள முடியும் எனவும் சட்ட நடவடிக்கைகளுக்காக மாத்திரமே அதனைப் பயன்படுத்த முடியும் எனவும் சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதால், அவற்றை இரகசியமாக பேண தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் 2015 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் குறித்த தடயவியல் கணக்கறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் எடுக்கக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இன்று கோப் குழு கூடவிருந்ததுடன், பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டுள்ளமையினால் இரத்தாகியுள்ளது.

ஏனைய செய்திகள்