யாழில் 3 மாத குழந்தையின் தந்தை டெங்கு நோயால் மரணம்

யாழில் 3 மாத குழந்தையின் தந்தை டெங்கு நோயால் மரணம்

யாழில் 3 மாத குழந்தையின் தந்தை டெங்கு நோயால் மரணம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2019 | 8:53 pm

Colombo (News 1st) கடந்த 23 ஆம் திகதி டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 வயதான நகுலநாதன் லவன் என்பவர் நேற்றிரவு (02) உயிரிழந்தார்.

யாழ். நாவாந்துறை – கொட்டடி பகுதியைச் சேர்ந்த இவர் 3 மாத குழந்தையயொன்றின் தந்தையாவார்.

இவ்வருடத்தில் டெங்கு காய்ச்சலினால் யாழ். மாவட்டத்தில் இதுவரை 3,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

போப்பாய், நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளிலும் யாழ். மாநகர சபை பகுதிகளிலுமே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

மேலும், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு புதிய விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்