இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே – நடிகை அஷ்ரிதா ஷெட்டி திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே – நடிகை அஷ்ரிதா ஷெட்டி திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே – நடிகை அஷ்ரிதா ஷெட்டி திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2019 | 5:18 pm

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

மனிஷ் பாண்டே தற்போது கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த முதலாம் திகதி நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ஓட்ட வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் மனிஷ் பாண்டே 45 பந்தில் 60 ஓட்டங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதனையடுத்து, நேற்று (02) காலை அவர் அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

மனிஷ் பாண்டே இடம்பிடித்துள்ள IPL அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்