by Staff Writer 02-12-2019 | 7:43 PM
சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்களை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனர்த்தங்களை எதிர்தகாள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு, இடர்முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சுற்றுநிருபமொன்றின் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்த அனைத்து செயற்பாடுகளினதும் இணைப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை பிரதமர் தலைமையில் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.