​தொடரும் சீரற்ற வானிலை – 03 பேர் பலி

​தொடரும் சீரற்ற வானிலை – 03 பேர் பலி

​தொடரும் சீரற்ற வானிலை – 03 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2019 | 7:33 pm

வலப்பனை – மலப்பட்டாவ பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால், மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

ஜீ.ஜீ.ரண்பண்டா என்பவர் கடந்த வருடத்தில் கூறிய வார்த்தையே அது.

58 வயது கூலித் தொழிலாளியான ரண்பண்டா, அவரது மனைவியான 52 வயதான பிசோ மெணிக்கா, அவர்களின் 16 வயதான மகன், கலன பெத்தும் மற்றும் உறவு முறை மகளான 17 வயது தினுஷா ஆகியோர் வசித்துவந்த வீடே மண் சரிவில் சிக்கியது.

நேற்று மாலை 6.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில்
இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்துள்ளனர்.

நேற்று பகல் தொடக்கம் பெய்த பலத்த மழை மீட்புப் பணிகளை தாமதப்படுத்தியது.

ரங்பண்டா, அவரது மனைவி, மற்றும் தினூறாவின் சடலங்கள் இன்று முற்பகல் இராணுவத்தினர்,
பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டன.

இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டிலும் இந்த வீட்டை அண்மித்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்த வீட்டை அண்மித்த பகுதியிலுள்ள கற்குவாரியே இவ்வாறு மண் சரிவு ஏற்படக் காரணம் என மக்கள் கூறுகின்றனர்.

தமது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக ரண்பண்டா பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை.

இறுதியில் ஒரு குடும்பமே மண்ணுக்குள் புதையுண்ட பரிதாபம் நேர்ந்துள்ளது.

ரண்பண்டாவின் 16 வயதான மகன் நாளை ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருந்தார்.

மண்ணுக்குள் புதையுடன்ட அவரை இதுவரை மீட்க முடியவில்லை.

நாட்டில் நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக, ஆயிரத்து 156 குடும்பங்களைச் சேர்ந்த  நான்காயிரத்து 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

158 குடும்பங்களைச் சேர்ந்த, 569 பேர் இடம்பெய்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கேகாலை, இத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில்,
நாளை மாலை நான்கு மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்