தேர்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் விசாரணை 

தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அதிகாரிகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 30-11-2019 | 3:49 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமுர்த்தி ஆணையாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சர், கல்வி அமைச்சர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர், ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்தார். இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் அந்தந்த நியமனங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்ட விசாரணை அறிக்கைகளுக்கு அமைய முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு அரச சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுவதாக சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்தார். இதன் பின்னர் அரச சேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் முறையான விசாரணைகளுக்கு அமைய விதி மீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனைய செய்திகள்