ஜனாதிபதியின் விஜயத்தால் எதிர்கால பயணம் வலுவடைந்தது

ஜனாதிபதி கோட்டாபயவின் விஜயம் எதிர்கால பயணத்தை வலுப்படுத்தியுள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் தெரிவிப்பு

by Staff Writer 30-11-2019 | 4:02 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது முதலாவது வௌிநாட்டு விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளமை இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை புதிய பரிணாமத்திற்கு கொண்டுசெல்ல வழியேற்படுத்தியுள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரபதிபவனில் நேற்று (29) ஜனாதிபதி கோட்டாபயவுடனான இரவு நேர விருந்துபசாரத்தின் போது இந்திய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்தை வலுப்படுத்தியுள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பொருளாதார, வர்த்தக, சமூக தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.