அலுவலர் கடத்தல்: சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை

அலுவலர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகம் அறிக்கை

by Staff Writer 30-11-2019 | 8:47 PM
Colombo (News 1st) இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் தமது அலுவலர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (29) உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த சம்பவத்தை அறிக்கையிடும்போது திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தூதரகம் உடனடியாக முறையாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் மற்றும் அவரின் உறவினர்களின் உடல் நிலை குறித்தும் தாம் கவனத்தில் கொண்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சம்பவத்துடன் தொடர்புடையவர் சாட்சியமளிக்கும் நிலைமையில் இல்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊழியரையும் அவரின் குடும்பத்தையும் வௌியேற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, சுவிட்சர்லாந்து அரசாங்கம் நிராகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டாலும், அவ்வாறான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.