லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2019 | 4:28 pm

பிரசித்தி பெற்ற லண்டன் பிரிட்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலை நடத்திய சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் வெடிக்கக்கூடிய சாதனமொன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகின்றது.

சந்தேகநபர் பயங்கரவாத குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கைதி என்பது தெரியவந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் கைதிகள் கலந்துகொண்டிருந்த நிகழ்விலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து லண்டன் பிரிட்ஜ் சிறிது நேரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்