புத்தளத்தில் வெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

புத்தளத்தில் வெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

புத்தளத்தில் வெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 4:42 pm

Colombo (News 1st) புத்தளத்தில் வெடிபொருட்கள் மற்றும் கேரளக்கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இளைஞர்கள் சிலரை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்கள் வசமிருந்த 12 மில்லிமீட்டர் வகையிலான 5 வெடிபொருட்களும் 3 கிராம் நிறையுடைய கேரளக்கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கேரளக்கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த வெடிபொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்