கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பரிசளித்தார் மோடி

கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பரிசளித்தார் மோடி

கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பரிசளித்தார் மோடி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 7:49 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகைப்படமொன்றை அன்பளிப்பு செய்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஹைதராபாத்தில் இராணுவப் பயிற்சிக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ இராணுவத்தில் சேவையாற்றிய போது பயிற்சிகளுக்காக இந்தியாவிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில் இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான வீ.கே.சிங் மற்றும் நைஜீரிய ஜனாதிபதி ஆகியோரும் உள்ளனர்.

இதேவேளை, இராணுவ அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே முகாமில் பயிற்சி பெற்ற நண்பரான இந்திய போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி ஜெனரல் வீ.கே.சிங் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார்.

இந்த இருவருடன் பயிற்சி பெற்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் 15 பேரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்