கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2019 | 4:50 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – சிவநகர் பகுதியில் மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். – வவுனியா வளாக பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் 22 வயதான விக்னராசா சாரங்கன் எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.

சிவநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது தந்தைக்கு சொந்தமான அரிசி ஆலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரிசி ஆலை உள்ள பகுதியில் வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், அதனை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்