இந்தியாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்துக் கொலை: நால்வர் கைது

இந்தியாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்துக் கொலை: நால்வர் கைது

இந்தியாவில் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்துக் கொலை: நால்வர் கைது

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2019 | 6:17 pm

Colombo (News 1st) இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி என்பவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் நால்வருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக 27 வயதான பிரியங்கா ரெட்டி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் திகதி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் பஞ்சராகியுள்ளது.

சாத்நகர் எனும் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த பிரியங்கா ரெட்டிக்கு உதவி செய்வதாகக் கூறி லொறியில் பயணித்த நால்வர் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொடூரமாக எரித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் நால்வரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.

இதையடுத்து, சந்தேகநபர்கள் நால்வரும் சந்சல்குடா மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்