முள்ளுத்தேங்காய் செய்கைக்கு தடை

முள்ளுத்தேங்காய் செய்கைக்கு தடை

முள்ளுத்தேங்காய் செய்கைக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2019 | 4:19 pm

Colombo (News 1st) முள்ளுத்தேங்காய் செய்கை தடை செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இதற்கான யோசனை கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனடிப்படையில், முள்ளுத்தேங்காய் செய்கையை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த காலங்களில் முள்ளுத்தேங்காய் செய்கையை தடை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்