பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2019 | 9:03 pm

Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைவர்களான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரொன்றில் மோதவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்த தொடர் நடத்தப்படவுள்ளது.

இந்த தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள 16 பேர் கொண்ட இலங்கை குழாத்தை திமுத் கருணாரத்ன வழிநடத்தவுள்ளார்.

ஓசத பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்னே, தனஞ்சய டி சில்வா , நிரோஷன் திக்வெல்ல மற்றும் டில்ருவன் பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுக்கும் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுரங்க லக்மால் , லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோர் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 11 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 19 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளது.

பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் 10 வருடங்களுக்கு பின்னர் டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்