ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2019 | 4:28 pm

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே (Yasuhiro Nakasone) தனது 101 ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார்.

நகசொனே 1982 முதல் 1987 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பணியாற்றினார்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன் அவர் நெருங்கிய நட்புறவை பேணியவராவார்.

இவர்களது நட்பு “ரொன் – யசு” என பிரபலமாக அழைக்கப்பட்டது.

ஜப்பானின் மிக மூத்த முன்னாள் பிரதமராகவும், உலகின் மிகவும் மூத்த முன்னாள் அரசியல் தலைவராகவும் யஷுஹிரோ நகசோனே வரலாற்றில் பதிவாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்