ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: அஜித் பி. பெரேரா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம்: அஜித் பி. பெரேரா

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2019 | 8:32 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால பயணம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என இதன்போது அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஜனநாயகமும் ஐக்கிய தேசியக் கட்சியும் பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகாரம் ஒரு புறத்திற்கு சென்றால், பிரஜைகளின் உரிமைகள் மட்டுப்படுத்தப்படும். இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டும். ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம். 25 வருடங்களாக எமது கட்சிக்கும் நாட்டிற்கும் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தற்போது புதிய தலைமைத்துவத்திற்கான சந்தர்ப்பம் வந்துள்ளது

என அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்