ஈராக்கில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈராக்கில் தொடரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-11-2019 | 10:16 AM
Colombo (News 1st) ஈராக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஈரானிய கன்சியூலர் அலுவலகத்துக்கு தீ வைத்துள்ளனர். அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரால் நூற்றுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் பலமான எதிர்ப்பு நடவடிக்கையாக இது கணிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு முன்னரே கன்சியூலர் அலுவலக அதிகாரிகள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து நஜாப்பில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கன்சியூலர் அலுவலகத்தில் இருந்த ஈரானிய கொடியை அகற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈராக்கிய கொடியை வைத்துள்ளனர். ஊழல் மிக்க அரசாங்கத்தை கண்டித்தும் மோசமான பொதுச்சேவை மற்றும் தொழில் வாய்ப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.