யாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்

யாழ்தேவி ரயில் தடம்புரண்டது: ஒருவர் காயம்

by Staff Writer 27-11-2019 | 7:02 PM
Colombo (News 1st) காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் கல்கமுவ பகுதியில் தடம்புரண்டது. கல்கமுவ பகுதியில் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று மாலை 3 மணியளவில் ரயில் தடம்புரண்டதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார். யாழ்தேவி ரயில் தடம்புரண்டதை அடுத்து வடக்கிற்கான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.