மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் - மிலிந்த

பொதுத்தேர்தலுடன் மக்கள் கருத்துக்கணிப்பையும் நடத்த வேண்டும் - மிலிந்த மொரகொட

by Staff Writer 27-11-2019 | 7:43 AM
Colombo (News 1st) புதிய அரசாங்கம் பொதுத்தேர்தலுடன் மக்கள் கருத்துக்கணிப்பையும் நடத்த வேண்டும் என PathFinder அமைப்பின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 86 ஆவது சரத்தின் கீழ், இதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிக்கையொன்றின் ஊடாக மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டியுள்ளார். 1. ஜனாதிபதியை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முறையா, வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற முறையா மிகவும் சிறந்தது 2. மாகாண சபைகளை நீக்கி உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தல் 3. விருப்பு வாக்கு முறையை நீக்கி பொதுத் தேர்தலுக்காக விகிதாசாரக் கலப்பு முறையை ஏற்படுத்தல் 4. மத, இன மற்றும் வலய ரீதியான பல்வகைமையுடன் தொடர்புடைய தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான, செனட் சபையொன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற விடயங்கள், மிலிந்த மொரகொடவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளாகும்.