புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

by Chandrasekaram Chandravadani 27-11-2019 | 11:28 AM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, 35 இராஜாங்க அமைச்சர்களும் 3 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். புதிய இராஜாங்க அமைச்சர்கள் : 01. சமல் ராஜபக்ஸ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் 02. வாசுதேவ நாணாயக்கார - நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் 03. காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 04. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 05. எஸ்.பி. திசாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 06. W.D.J. செனவிரத்ன - பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 07. மஹிந்த சமரசிங்க - பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் 08. C.B. ரத்னாயக்க - ரயில்வே சேவை இராஜாங்க அமைச்சர் 09. லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன - தகவல் மற்றும் தொடர்பாடல் துறை இராஜாங்க அமைச்சர் 10. சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 11. அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தகம், பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சர் 12. சுசில் பிரேமஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் 13. மஹிந்தானந்த அளுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர் 14. துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் 15. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் 16. பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர் 17. தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் 18. லசந்த அழகியவன்ன - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு இராஜாங்க அமைச்சர் 19. ரோஹித அபேகுணவர்தன - எரிசக்தி இராஜாங்க அமைச்சர் 20. கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 21. அருந்திக பெர்னாண்டோ - சுற்றுலா ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 22. திலங்க சுமதிபால - தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர் 23. மொஹான் டி சில்வா - மனித உரிமைகள், சட்ட சீர்த்திருத்த இராஜாங்க அமைச்சர் 24. விஜித வேருகொட - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் 25. ரொஷான் ரணசிங்க - மஹாவெலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 26. ஜானக வகும்புர - ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சர் 27. விதுர விக்மரநாயக்க - விவசாய இராஜாங்க அமைச்சர் 28. ஷெஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் 29. கனக ​​ஹேரத் - துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 30. திலும் அமுணுகம - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் 31. லொஹான் ரத்வத்தே - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் 32. விமலவீர திசாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் 33. ஜயந்த சமரவீர - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் 34. சனத் நிஷாந்த பெரேரா - கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் 35. தாரக பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய பிரதி அமைச்சர்கள் : 01. நிமல் லங்ஸா - சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் 02. காஞ்சன விஜேசேகர - கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் 03. இந்திக்க அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர்