தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஐ.தே.க ஆலோசனை

by Staff Writer 27-11-2019 | 8:56 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று கூடினர். கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் பாலித்த தெவரப்பெரும, திலக் மாரப்பன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். சுமார் மூன்று மணித்தியாலங்களாக நடைபெற்ற இக்கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்கு வங்கியின் வீழ்ச்சி, 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஏற்பட்ட முன்னேற்றம், இந்த தேர்தலில் அதன் பிரதிபலன்கள் கிடைக்காமைக்கான காரணம் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த திசாநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடி இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதற்கான தீர்வினை எட்ட எதிர்பார்ப்பதாக துஷார இந்துனில் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்