சர்வதேச T20 இல் ஷிகர் தவான் பங்கேற்கமாட்டார்

சர்வதேச இருபதுக்கு 20 இல் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

by Staff Writer 27-11-2019 | 1:00 PM
Colombo (News 1st) இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் (Shikhar Dhawan) மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷிகர் தவான் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்கு பதிலாக விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான சஞ்சு சம்சனுக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 3 சர்வதேச இருபதுக்கு 20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.