உடன் அமுலாகும் வகையில் வரி திருத்தங்கள் அறிவிப்பு

by Staff Writer 27-11-2019 | 4:55 PM
Colombo (News 1st) உடன் அமுலாகும் வகையில் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று கூடியது. இதன்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள வரி திருத்தங்கள் தொடர்பில் தௌிவூட்டப்பட்டது. வீட்டுப் பொருட்களுக்காக அறவிடப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான தேச நிர்மாண வரி, பொருளாதார சேவைகளுக்கான கட்டண வரி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி ஆகியனவும் இரத்து செய்யப்பட்டுள்ளன. பங்குச்சந்தையில் அறவிடப்படும் மூலதன வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவற்றையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். நாட்டு மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் VAT வரியை 8 வீதம் வரை குறைத்துள்ளதாக அவர் கூறினார். டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் VAT வரி குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார். இதேவேளை, அறக்கட்டளை நிலையங்கள் மற்றும் சமய ஸ்தலங்களுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் உழைக்கும் பணத்திற்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வரியை 25 வீதத்தினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.