பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 8:14 pm

Colombo (News 1st) சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இதன் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீயானி விஜேவிக்ரம, சுமேதா ஜீ ஜயசேன, வீரகுமார திசாநாயக்க, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, துனேஷ் கன்கந்த, மஹிந்த சமரசிங்க, தேனுக விதானகமகே, பியல் நிஷாந்த, சந்திம வீரக்கொடி, துஷ்மந்த மித்ரபால, லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • துனேஷ் கன்கந்த – இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு
  • வீரகுமார திசாநாயக்க – அனுராதபுர மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு
  • பியல் நிஷாந்த – களுத்துறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு
  • லக்ஷ்மன் வசந்த – மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்