தானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை

தானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை

தானிய இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 12:48 pm

Colombo (News 1st) சோளம், குரக்கன், எள்ளு, பயறு மற்றும் மரமுந்திரிகை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மட்டுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் ஆலோசனையின் பிரகாரம், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பயிர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான விவசாய காணிகளை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் உள்ளூர் விவசாயிகள் நன்மையடைவர் எனவும் விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்