ஆறு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

ஆறு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

ஆறு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2019 | 7:30 am

Colombo (News 1st) நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு இன்று (27) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்