by Bella Dalima 26-11-2019 | 6:58 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு வழங்குவதற்கு கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தவறானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (25) தெரிவித்திருந்தார்.
அவரின் அந்த நிலைப்பாடு பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
MCC உடன்படிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.
நாட்டிற்கு பாதகமாக அமையும் எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்போவதில்லை என விமல் வீரவன்ச கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அக்கருத்து விமல் வீரவன்சவினுடையது மாத்திரமல்லாது தமது கருத்தும் அதுவே என அவர் குறிப்பிட்டார்.