by Staff Writer 26-11-2019 | 7:04 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை மனுக்கள் மீண்டும் நாளை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கொழும்பு - இலக்கம் 7 மேல் நீதிமன்றத்தில் இந்த மனு நாளை பரிசீலிக்கப்படவுள்ளது.