ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை மனு பரிசீலனை

ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை மனு பரிசீலனை

ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை மனு பரிசீலனை

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 1:08 pm

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனு இன்று (26) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்தி முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சில விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக குறித்த மனுவை நாளை (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு, இலக்கம் 7 மேல் நீதிமன்றத்தில் இந்த மனு நாளை பரிசீலிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்