முப்படையின் உதவியுடன் போதைப்பொருள் சுற்றிவளைப்பு

முப்படைகளின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் சுற்றிவளைப்பு

by Staff Writer 26-11-2019 | 7:24 AM
Colombo (News 1st) போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேலும் கடுமையாக்குவதற்கு முப்படைகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது. இது தொடர்பில் முப்படையினருடன் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 70 வீதமான போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாகவே நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், மியன்மார், தாய்லாந்து, சீனா, இந்தியா, பெரு மற்றும் பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றமை தெரியவந்துள்ளது.