மலேசியா செல்வதாக நாமல் ராஜபக்ஸ நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

மலேசியா செல்வதாக நாமல் ராஜபக்ஸ நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 5:35 pm

Colombo (News 1st) மலேசியாவிற்கு பயணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் அறிவித்துள்ளார்.

வௌிநாடு செல்வதாயின் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்கு அமைய நாமல் ராஜபக்ஸ இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான Govers Corporated Services நிறுவனம் ஏனைய நிறுவனங்களுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 30 மில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் திரட்டியமை தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் பிரகாரம் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

11 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் நாமல் ராஜபக்ஸவிற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்