பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணை ஆரம்பத்தில் சீருடைகள் வழங்கப்படும்: கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணை ஆரம்பத்தில் சீருடைகள் வழங்கப்படும்: கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணை ஆரம்பத்தில் சீருடைகள் வழங்கப்படும்: கல்வி அமைச்சு

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2019 | 4:32 pm

Colombo (News 1st) அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அடுத்த தவணை ஆரம்பத்தின் போது சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் மூன்று நாட்களில் நிறைவுபெறவுள்ளன.

எனினும், மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான சீருடைகள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

இதற்கான முழு பொறுப்பையும் அமைச்சு ஏற்பதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (27) கூடவுள்ள அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்து , பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைகளை அடுத்த தவணை ஆரம்பத்தில் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்