தவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை: சவேந்திர சில்வா

தவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை: சவேந்திர சில்வா

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 7:45 pm

Colombo (News 1st)  இராணுவத்தில் எவராவது ஒருவர் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாரத் சக்தி மற்றும் SNI-இன் பிரதம ஆசிரியர் நிடின் கோக்லேயுடனான நேர்காணலில் இராணுவத் தளபதி இதனைக் கூறினார்.

தமது அமைப்பின் அனைத்து தரத்தில் உள்ளவர்களும் உயர் மட்டத்தில் ஒழுக்கத்தை பேணுவதாகவும் தவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலைமைக்கேற்ப எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க தாம் தயாராக இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்