ஜூலியன் அசாஞ்ச் சிறையிலேயே இறக்கக்கூடும்: 60 மருத்துவர்கள் கடிதம்

ஜூலியன் அசாஞ்ச் சிறையிலேயே இறக்கக்கூடும்: 60 மருத்துவர்கள் கடிதம்

ஜூலியன் அசாஞ்ச் சிறையிலேயே இறக்கக்கூடும்: 60 மருத்துவர்கள் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2019 | 4:13 pm

Colombo (News 1st) விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பிரிட்டன் அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாவிட்டால் அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என மருத்துவர்கள் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இங்கிலாந்து உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் மற்றும் மறைமுக உள்துறை செயலர் டயான் அபோட் ஆகியோருக்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தை விக்கிலீக்ஸ் திங்கட்கிழமை விநியோகித்துள்ளதாக ஹில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிணையை நிராகரித்த அசாஞ்ச், தற்போது இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் 50 வார சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஸாஞ்சே, அவை அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என குற்றம்சாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்