by Staff Writer 26-11-2019 | 1:28 PM
Colombo (News 1st) கொழும்பு நகரிலுள்ள வீடுகளில் அகற்றப்படும் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், காலை 6.30 மணிக்கு குப்பைகள் சேகரிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் இதுவரை காலை 7.30 மணியளவிலேயே குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.