கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை 

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை 

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 11:54 am

Colombo (News 1st) கடவத்தை பகுதியில் பிரதான நீர்விநியோகக் குழாயில் சேதம் ஏற்பட்டதால், கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கடவத்தை வௌிச்சுற்றுவட்டப் பாதையின் நிர்மாணப் பணிகளின்போது, பிரதான நீர்விநியோகக் கட்டமைப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க – சீதுவ, ஜாஎல, வத்தளை, மாபோல ஆகிய நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜாஎல பிரதேச சபை, வெலிசர, கெரவலப்பிட்டிய, திக்ஓவிட்ட, மாத்தாகொட, போப்பிட்டிய, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, ராகம, வல்பொல, பட்டுவத்த, புலுகஹகொட, ஹொரபே, சிறைச்சாலை வீதி, குருகுலாவ, ஜயஶ்ரீகம, பொல்கஹஹேன மற்றும் தியகம நகரங்களுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, சேதமடைந்த நீர்க்குழாய் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீ்ர் விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் நேரத்தை வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்