நள்ளிரவின் பின்னர் மேலதிக வகுப்புகள் நடத்தத் தடை

இன்று நள்ளிரவின் பின்னர் மேலதிக வகுப்புகள் நடத்தத் தடை

by Staff Writer 26-11-2019 | 6:56 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன இன்று (26) நள்ளிரவுடன் நிறைவுசெய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 011 27 84 208, 011 27 84 537, 011 31 88 350 அல்லது 011 31 40 314 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.