இந்தியாவின் ‘நிரீக்‌ஷக்’ கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவின் ‘நிரீக்‌ஷக்’ கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவின் ‘நிரீக்‌ஷக்’ கப்பல் நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2019 | 8:51 am

Colombo (News 1st) பயிற்சி சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ‘நிரீக்‌ஷக்’ கப்பல் நேற்று (25) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி வரை ‘நிரீக்‌ஷக்’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினால் ‘நிரீக்‌ஷக்’ கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டதுடன், கப்பலின் கட்டளைத்தளபதி கொமாண்டர் B.K. பிரசாந்த் மற்றும் இலங்கை கடற்படையின் ரியல் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்