செம்மறி ஆடுகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது

செம்மறி ஆடுகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது

by Staff Writer 25-11-2019 | 2:57 PM
Colombo (News 1st) ரோமானிய கடற்பிராந்தியத்தில், 14000 செம்மறி ஆடுகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மிடியா துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பல் Constanta நகருக்கு தென்கிழக்கு பிராந்தியத்தில் கருங்கடலுக்கு அருகாமையில் கவிழ்ந்துள்ளது. கப்பல் பணியாளர்களான 22 சிரிய பிரஜைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர். செம்மறியாடுகளைக் காப்பாற்றுவதற்காக பொலிஸார், தீயணைப்பு சேவைப்பிரிவினர் மற்றும் ரோமானிய கடலோரக் காவற்படையினர் மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். சுமார் 32 ஆடுகள் நீந்தி வந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் பல ஆடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.