by Staff Writer 25-11-2019 | 3:05 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடத்தில் மாத்திரம் 7000 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் காசநோய் ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் டொக்டர் எச்.டீ.பீ. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சுமார் 8000 பேர் வரையில் காசநோயால் பாதிக்கப்படுவதுடன் அவர்களில் 500 பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காசநோயால் பீடிக்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனையில் உரிய வகையில் கலந்துகொள்ளாமையே, நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணம் எனவும் டொக்டர் எச்.டீ.பீ. ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் உரிய முறையில் சிகிச்சை பெறும்போது காசநோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே காசநோய்க்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளுமாறும் காசநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் எச்.டீ.பீ. ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.