சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் 27ஆம் திகதியுடன் நிறைவு

சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் 27ஆம் திகதியுடன் நிறைவு

சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் 27ஆம் திகதியுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2019 | 3:21 pm

Colombo (News 1st) கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மீளாய்வுப் பரீட்சைகள் ஆகியன எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுசெய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சை மத்திய நிலையங்களில் பணியாற்றவுள்ள கண்காணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உதவி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சிகள் இன்று இடம்பெறுகின்றன.

பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 4987 பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 12 000 அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இம்முறை சாதாராணதர பரீட்சைக்காக 8 விசேட மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்