கொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 24 பேர் பலி

கொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 24 பேர் பலி

கொங்கோவில் குடியிருப்பின் மீது வீழ்ந்த விமானம் ; 24 பேர் பலி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Nov, 2019 | 6:27 pm

Colombo (News 1st) மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியிலுள்ள கோமா (Goma) நகர்ப்பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளின் மீது இந்த விமானம் வீழ்ந்துள்ளதில் 4 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனது பயணத்தை ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் குடியிருப்புப் பகுதியொன்றில் இந்த விமானமானது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வடக்கு கிவு பிராந்திய ஆளுநர் Zanzu Kasivita தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 17 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருவரும் பயணித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்