யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2019 | 4:01 pm

Colombo (News 1st) சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா இன்று எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, சுமார் 1000 கிலோகிராம் கேரளக்கஞ்சா எரித்து அழிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கரின் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையாகவுள்ள வெற்றுக்காணியில் இவை எரித்தழிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட 20 வழக்குகளின் சான்றுப்பொருளாகக் காணப்பட்ட கேரளக்கஞ்சாவே எரித்தழிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2,500 கிலோகிராமிற்கும் அதிகமான கேரளக்கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்